இலவச கல்வி திட்ட தேர்வாளர்களுக்கான நெறிப்படுத்தல் நிகழ்ச்சி

 தமுமுக-வின் மனிதவள மேம்பாட்டு அணியான விழி-யின் உயர்கல்வி திட்டத்தின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு கல்லூரியில் சேரவிருக்கும் மாணவர்களுக்கு சேர்க்கை அட்டை வழங்குதல் மற்றும் நெறிப்படுத்தல் நிகழ்ச்சி இணையதளம் வாயிலாக 18.08.2020 அன்று நடைபெற்றது.

விழியின் மாநிலச் செயலாளர் முனைவர் ஹுஸைன் பாஷா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமுமுக, மமக-வின் மாநிலத் தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ், மாநில பொதுச்செயலாளர் பேரா.ஹாஜாகனி, சமூக நீதி மாணவர் இயக்கத்தின் மாநில செயலாளர் வழக்கறிஞர் நூர்தீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

மாநில துணைச்செயலாளர் பொறியாளர் அப்துல் சமது அவர்கள் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சியை மாநில துணைச்செயலாளர் எழுத்தாளர் புதுமடல் ஹலீம் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

Comments