செப்டம்பர் 26, 2021 ஞாயிறு அன்று திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் விழியின் சார்பாக ஒன்றிய, மாநில அரசுகளின் கல்வி உதவித் தொகைத் திட்டங்கள் மற்றும் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த கருத்தரங்கு செங்குன்றம் M.S. காம்ப்ளக்சில் சிறப்பாக நடைபெற்றது.
மாநிலத் துணைச் செயலாளர் அப்துல் சமது, விழுப்புரம் வடக்கு மாவட்ட விழி செயலாளர் கபீர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
விழியின் மாநில செயலாளர் முனைவர் M.ஹுஸைன் பாஷா அவர்கள் விழியின் சார்பாக வழங்கப்படும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் குறித்து விளக்கமளித்து தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், செங்குன்ற நகர நிர்வாகிகள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
Comments
Post a Comment