தமுமுக-மமக வட சென்னை மாவட்டம், ஆர்கே நகர் பகுதிக்குட்பட்ட 40வது வட்டத்தில் அமைந்துள்ள அரசு டாக்டர் இராதாகிருஷ்ணன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் முதலாமாண்டு மாணவ மாணவிகளுக்கான வாழ்வியல் பயிற்சி வகுப்பு 22-10-2021, வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்றது.
ஆர்.கே நகர் பகுதி தமுமுக-மமக தலைவர் A.அப்துல் ரசாக் அவர்கள் தலைமையில் பகுதி தமுமுக செயலாளர் நேதாஜி J.அப்துல் காதர் முன்னிலையில் இவ்வகுப்பு நடைபெற்றது.
விழி அணி மாநில செயலாளர் Dr.M.ஹூஸைன் பாஷா அவர்கள் இந்த பயிற்சி வகுப்பினை சிறப்பாக நடத்தினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் வடசென்னை மாவட்ட தமுமுக செயலாளர் S.ரியாசுதீன் மாவட்ட துணைச் செயலாளர் M.Gஅபுதாஹீர் பகுதி மருத்துவ சேவை அணி செயலாளர் K.இப்ராஹிம் பகுதி அணி செயலாளர் H.முபாரக் மற்றும் 39வது வட்ட சமூகநீதி மாணவர் இயக்க செயலாளர் M.பைசல், கல்லூரிப் பேராசிரியர்கள் கிளமென்ட் பாஸ்கர், டாக்டர் ஹேமா ஜோ, தமிழ்த்துறை தலைவர் இரா.சங்கர் மற்றும் வணிகவியல் துறை பேராசிரியை பவளமணி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கலந்து கொண்ட மாணவர்கள் இந்த வகுப்பு தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என்றும் தன்னால் இந்த வகுப்பின் மூலமாக வாழ்வில் சில மாற்றங்களை கொண்டு வர முடியும் என்றும் தங்களது நம்பிக்கையையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.
முன்னதாக நமது விழி அணி சார்பாக கல்லூரி வளாகத்தில் Dr.M.ஹூஸைன்பாஷா அவர்களால் மரக்கன்று நடப்பட்டது.
எல்லா புகழும் இறைவனுக்கே.
Comments
Post a Comment